×

பீளமேட்டில் திமுக தேர்தல் அலுவலகம் நா.கார்த்திக் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கோவை, மார்ச் 20:  கோவை சிங்காநல்லூர் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக வேட்பாளராக எம்எல்ஏ நா.கார்த்திக் போட்டியிடுகிறார். இதையடுத்து, அப்பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் திமுக தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மதிமுக மோகன் குமார், ஆடிட்டர் அர்ஜூனன் ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரம், விடுதலை சிறுத்தை கட்சி இலக்கியன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மாரிச்செல்வம், செல்வராஜ், உதயகுமார், பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, பொறுப்பாளர் சிங்கை சிவா, நாகராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, திமுக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் நா. கார்த்திக் தமிழ்நாடு குரும்பர் சங்கத் தலைவர் ஆர். கிருஷ்ணசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர், கோவை விமான நிலையம் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்றார். இதையடுத்து, மாலையில் கிணத்துக்கடவு பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்எல்ஏ நா.கர்த்திக் உள்பட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : Na. Karthik MLA ,DMK ,Peelamedu ,
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்